Wednesday, November 9, 2016

Filled Under:

நாளை ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி


பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் செல்ல உள்ளார். நவம்பர் 11-ம் தேதி ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேயை சந்தித்துப் பேசுகிறார்.
நாளை ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி அன்னிய முதலீட்டை அதிகரிப்பதற்காக அடிக்கடி பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வருகிறார்.

இந்நிலையில், மோடி மூன்று நாள் அரசு முறை பயணமாக நாளை ஜப்பான் செல்கிறார். அங்கு நடைபெறும் இருநாடுகள் இடையிலான வருடாந்திர மாநாட்டில் கலந்து கொள்கிறார். மோடியுடன் அதிகாரிகள் குழுவும் செல்ல உள்ளது. 

நவம்பர் 11-ம் தேதி அந்நாட்டு ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேயை சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின் போது இந்தியா-ஜப்பான் உறவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளில் செய்ய வேண்டியவை பற்றி விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக பொருளாதாரம், ராணுவம், அறிவியல் ஆய்வு ஆகிய துறைகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பேசப்படும். இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்படும் என்று தெரிகிறது.

மேலும், ஜப்பான் நாட்டு மக்களையும் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட திட்டமிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment