கருப்புப் பணத்தை ஒழிக்கும் விதாமாக 500, 1000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கும் கள்ளநோட்டு தயாராகி விட்டதாக தெரியவந்துள்ளது.

பெங்களூர்:
புழக்கத்தில் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற நாடு முழுவதும் வங்கிகளின் வாசலில் மக்கள் கால்கடுக்க காத்திருக்கும் நிலையில் மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு மக்களின் கைகளில் பரவலாக சென்றடையும் முன்னரே, இந்த நோட்டுக்கும் கள்ளநோட்டு தயாராகி விட்டதாக தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய விளைப்பொருள் சந்தைக்கு நேற்றுவந்த ஒருவர் இங்குள்ள கடைக்காரரிடம் 2 ஆயிரம் ரூபாயை தந்து மளிகைப்பொருட்களை வாங்கியுள்ளார். கடையில் வேலை செய்யும் பணியாளரும் ரூபாயை வாங்கிகொண்டு பொருட்களை தந்தனுப்பியுள்ளார்.
பின்னர், அந்த ரூபாய் நோட்டை உற்றுப் பார்த்த கடையின் உரிமையாளர், இந்தப் பணம் புதிய 2 ஆயிரம் நோட்டை கலர் ஜெராக்ஸ் மெஷினில் வைத்து எடுத்த பிரதி என்பதை கண்டுபிடித்தார்.
இதையடுத்தும் கடையின் உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் மேற்படி கள்ளநோட்டு, எந்த வங்கி கிளையில் இருந்து எடுக்கப்பட்ட நல்ல நோட்டை வைத்து பிரதி எடுக்கப்பட்டது? என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

0 comments:
Post a Comment