Wednesday, November 9, 2016

Filled Under:

ஜனநாயகக்கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்க்கு தொலைபேசியில் ஒபாமா வாழ்த்து


வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயகக்கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கு அமெரிக்க அதிபர்  ஒபாமா தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் 48.5 சதவிகித வாக்குகள் பெற்று 276 இடங்களிலும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் 47.2 சதவிகித வாக்குகள் பெற்று 218 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் அமெரிக்க அதிபராக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். வரும் 2017ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில்  குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்க்கு தற்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். மேலும் அதிபராக பதவி ஏற்கும் விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று ஒபாமாவிற்கு டிரம்ப் அழைப்பு விடுத்தார்.

அமெரிக்காவின் அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment