Wednesday, December 7, 2016

Filled Under:

வங்க கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதிய புயல் உருவாகிறது: தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு

New storm formed in the Bay of Bengal intensified Kasparov zone: Heavy rains in the state the opportunity to
பதிவு செய்த நேரம்:2016-12-08 00:04:32
சென்னை: வங்கக் கடலில் அந்தமானில் நிலை கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாக வாய்ப்புள்ளது. அந்த புயலுக்கு வர்தா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு தொடங்க வேண்டிய வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கியது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்நிலையில் நவம்பர் முதல் வாரத்தில் ஒரு காற்றழுத்தம் உருவானது. அது வலுப்பெற்று மியான்மர் நோக்கி சென்றது. அதனாலும் தமிழகத்தில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. பின்னர் அந்தமான் கடல் பகுதியில் கடந்த 28ம் தேதி காற்றழுத்தம் உருவானது.  பின்னர் அது புயலாக மாறியது. அதற்கு நடா புயல் என்று பெயரிடப்பட்டது. இதையடுத்து டிசம்பர் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

அந்த புயல் 5ம் தேதி வேதாரண்யம் அருகே கரையைக் கடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் 3ம் தேதி காலையே அந்த புயல் நாகப்பட்டினம் அருகே கரையைக் கடந்தது. இதனாலும் தமிழகத்தில் பெரிய அளவில் மழை ஏதும் பெய்யவில்லை. நாகப்பட்டினம், காரைக்கால் பகுதியில் மட்டும் மழை பெய்தது. இப்படி அக்டோபர் முதல் நவம்பர் 5ம் தேதி வரை வங்கக் கடலில் 3 புயல்கள் தோன்றியும் தமிழகத்தில் இயல்பாக பெய்யவேண்டிய 440 மிமீ மழை பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏமாற்றத்துக்கு பிறகு  மீண்டும்  தென்கிழக்கு வங்கக் கடலில் தெற்கு அந்தமான் மற்றும் வடக்கு சுமத்ரா தீவுக்கும் இடையில் வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவானது. அது மெல்ல வலுப்பெற்று காற்றழுத்தமாக மாறியது. பின்னர் அந்த காற்றழுத்தம் வட மேற்கு திசையில் நகர்ந்து அந்தமானுக்கு மேற்கு பகுதியில் நேற்று நிலை கொண்டது. அது மேலும் வலுப்பெற்று தீவிர காற்றழுத்தமாக மாறியுள்ளது. இன்று காலை நிலவரப்படி அது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து புயலாக மாறும் வாய்ப்புள்ளது. அத்துடன் வட மேற்கு திசையில் நகர்ந்து விசாகப்பட்டினத்துக்கு 1180 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.

வங்கக் கடலில் இதுவரை உருவான 3 காற்றழுத்தங்களை அடுத்து தற்போது உருவாகியுள்ள இந்த காற்றழுத்தம் புயலாக மாறினால் அது வார்தா என்று அழைக்கப்படும். இது மேலும் வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோரப் பகுதிக்கு நாளை நெருங்கும். மேலும் தென் தமிழக கடலோரப் பகுதியில்  ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. அதனால் தமிழக கடலோரப் பகுதியில் மழை பெய்யும். சென்னையில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். புயல் சின்னம் கடலில் வெகுதொலைவில் உள்ளதால் அதன் நகர்வு குறித்து கண்காணித்து வரப்படுகிறது. தமிழக கடலோரப் பகுதியில் தற்போது எந்த எச்சரிக்கையும் இல்லை. இந்நிலையில், புயல் உருவாகியுள்ள தூரத்தை காட்டும் வகையில் எண்ணூர் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை எண் 1 கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment