Monday, December 5, 2016

Filled Under:

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம்


முதல்வர் ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, தமிழகத்தின் புதிய முதல்வராக பன்னீர் செல்வம் பதவியேற்றுள்ளார்.
தமிழக முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம்
சென்னை: 

தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்ததாக அப்பல்லோ மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, தமிழகத்தின் புதிய முதல்வராக நிதி அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுள்ளார்.  புதிய முதல்வராக பன்னீர்செல்வத்துக்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 15 அமைச்சர்களும் பதவியேற்றனர். 

இதற்கான நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அப்போது ஜெயலலிதாவின் மறைவிற்கு 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னதாக சென்னை ராயப்பேட்டை உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இரவு 10.30 மணியளவில் நடைபெற்ற அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் பன்னீர்செல்வம் சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக பன்னீர்செல்வம் பதவியேற்க உள்ளார். முன்னதாக ஏற்கனவே பன்னீர் செல்வம் இரண்டு முறை தமிழக முதல்வராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment