Friday, December 9, 2016

Filled Under: ,

இ து தான் இன்று சில முசுலிம்களின் நிலை,,

plz forgive me..its tamil aritcle...but..very important

Create By:-
*mohamed rishah*

😰 *இது தான் இன்று சில முஸ்லிம்களின் நிலை*😰

💥 _மனிதாபிமானம் என்பதை மறந்து இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்குறான்_

💥 _ஆஹரத்தை புறக்கணித்து துன்யா மேல் மோகம் கொண்டு விட்டான்._

🔶 _அல்லாஹ் ஒரு நாளைக்கு 5 தடவை அழைக்கிறான். அது அவன் காதில் விழாது. யாரோ ஒருவரின் தொலைபேசி அழைப்பு ஒலி மட்டும் எப்படி தூக்கத்திலும் அவன் காதுக்கு கேட்டு விடும்._

🔶  _அல்லாஹ்வின் திருமறையை ஒரு நாளைக்கு ஒரு தடவையேனும் திறக்க நேரமில்லை. ஆனால் *whatsapp, viber, Facebook, Twitter* என அனைத்தையும் 24 மணிநேரமும்  திறந்து வைத்திருக்குறான்._

🔶 _எவ்வளவோ அல்லாஹ்வுக்கு மாறு செய்திருப்பான். ஒரு தடவை கூட தவ்பா செய்ய மனம் நினைப்பது குறைவு. ஆனால் தவறுதலாக தட்டு பட்ட ஒருவரிடம் 10 தடவை மன்னிப்பு கேட்பான்._

🔶 _அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற அதிகாலை எழ மாட்டான். ஆனால் வேலை செய்யும் முதலாளியின் கட்டளைக்கு பயந்து அலாரம் வைத்து எழுவான்._

🔶 _அற்ப தொழில் நஷ்டத்துக்காக கைசேதப் படுவான். மறுமையில் கைசேதப் படப் போவதை எண்ண மாட்டான்._

🔶 _கோமான் நபிகளாரின் பொன்மொழிகள் 10வது முழுமையாக அறிந்து வைத்திருக்க மாட்டான். ஆனால் சினிமா கூத்தாடிகளின் ஒவ்வொரு *Punch Dialogues*ஐயும் மந்திரம்  போல் சொல்வான்._

🔶 _திருமறை வசனம் ஓதிக் காண்பிக்கப் பட்டால் அது எந்த சூறாவில் உள்ளது என சொல்ல  முடியாதவனாய் இருப்பான் ஆனால் ஒரு பாடல்வரி பாடிக்காட்டப்பட்டால் எந்த திரைப்படம் என்ன பாடல் என அச்சொட்டாய் சொல்வான்._

🔶 _அவனது காதுகள் குர்ஆன் ஓதலுக்கோ பயான் ஓடியோவுக்கோ செவி சாய்க்காது. ஹராமான இசைக்கு செவி சாய்ப்பான்._

🔶 _இபாதத்தில் இன்பம் காண மாட்டான். பாவத்திற்கு ரசிகனாய் இருப்பான்._

🔶 _அல்லாஹ்வின் பாதையில் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய யோசிப்பான். வீண் ஆடம்பரங்களுக்கு லெட்ச கணக்கில் கணக்கின்றி செலவழிப்பான்._

🔶 _சுவர்க்கத்துக்கு நன்மாராயம் செய்யப்ட்ட 10ஸஹாபாக்களை அறிந்திருக்க மாட்டான். கிரிக்கட் வீரர்களில் ஒருவரின் பெயரைக் கூட தெரியாமல் இருக்க மாட்டான்._

🔶 _சந்தர்ப்ப துஆக்கள் ஓதியிருக்க மாட்டான். ஆனால் பாடல் வரிகளை மனனமாக்க மறந்திருக்க மாட்டான்._

🔶 _காதுகளைக் கிழித்து ஒலிக்கும் பாங்குக்கு மரியாதை செலுத்தி மௌனிக்க மாட்டான். ஆனால் நகைச்சுவை காட்சியை ரசிக்க அனைவரின் வாயையும் மூட வைப்பான்._

🔶 _போலி துன்யாக்காய் கோடி கணக்கில் சேர்த்து வைப்பான். மஹ்ஷர் நாளில் கை கொடுக்க எதுவும் சேகரிக்க மாட்டான்._

🔶 _சிறிய கவலையையும் பெரிதாய்  எண்ணுவான். முள் குத்தும் வேதனைக்கும் பாவம் மன்னிக்கப் படுவதை அறிந்துருக்க மாட்டான்._

🔶 _தொழுதுவிட்டு இறைவறனுக்காய் திக்ர் செய்ய 10 நிமிடம் கூட ஒதுக்க மாட்டான். ஆனால் Phone ல் game விளையாட 10 மணிநேரம் என்றாலும் தயங்க மாட்டான் ._

இதை எழுதும் நான் உட்பட அனைவரும் பாவங்கள் செய்யக்கூடிய  சாதாரண மனிதர்ளே!!!
*இன்ஷா அல்லாஹ் தவ்பா செய்வோம். ஆஹரத்துக்காய் சேர்ப்போம்.*

0 comments:

Post a Comment