பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தை நிறைவற்ற மத்திய அமைச்சரவை இன்று ஒப்புத ல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் தில்லியில் இன்று மத்திய அமைச்சரவைக்கு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சர்வதேச பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த மத்திய அமைச்சசரவை ஒப்புதல் அளித்தது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனித வளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த தகவலை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
இதுவரை உலகில் 61 நாடுகள் இந்த ஒப்பந்தத்தை அமல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளன. ஆனால் உலக நாடுகளில் பெருமளவு பசுமைக்குடில் வாயுக்களை வெளியேற்றும் நாடுகளில், 55 சதவீதம் நாடுகள் இதற்கு ஒப்புதலளிக்க வேண்டும். தற்போது இந்தியாவும் இதனை நடைமுறைப்படுத்த முடிவு செய்ருதிப்பதன் மூலம் இது சாத்தியமாகியிருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Post by:vkalathur kalam
0 comments:
Post a Comment