Tuesday, September 27, 2016

Filled Under:

காவிரி நதி நீர் விவகாரம்: முதலமைச்சர் ஜெயலலிதா உயர் அதிகாரிகளுடன் 'திடீர்' ஆலோசனை!


jayalalithaa
காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, அரசு உயர்  அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று ‘திடீர்’ ஆலோசனை நடத்தினார்.
காவிரி நதி நீர் விவகாரத்தில் கர்நாடகம் மீது தமிழ்நாடு தொடுத்திருந்த நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் கார்நாடக அரசை கடுமையாக கண்டித்தும், தமிழகத்திற்கு மேலும் இரண்டுநாட்கள் 6000 கன  அடிநீர் திறந்து விடுமாறு உச்ச நீதி மன்றம் இன்று உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து உடல் நாளாக குறைவு காரணமாக சென்னை அப்பலோ  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா அரசு உயர் அதிகாரிகளுடன் 'திடீர்' ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில்  தமிழக தலைமைச் செயலாளர் ராமமோஹன ராவ், பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அரசு உயர் அதிகாரிகள்  கலந்து கொண்டனர். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாக தெரிகிறது.

Post by:vkalathur kalam 

0 comments:

Post a Comment