Wednesday, September 28, 2016

Filled Under:

வெளிநாட்டு பட்டாசுகளை விற்றால் கடும் நடவடிக்கை மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி, தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (அக்டோபர்) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பட்டாசு தயாரிப்பில் உள்நாட்டு தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.கடந்த சில ஆண்டுகளாக சீனா உள்ளிட்ட வெளிநாட்டு பட்டாசுகள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதால், உள்நாட்டு பட்டாசு விற்பனை பாதிக்கப்படுவதாக மத்திய அரசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து பட்டாசுகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது சட்டவிரோதமானது என்றும், தண்டனைக்குரிய செயல் என்றும் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.இதுகுறித்து மத்திய அரசின் வணிகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பட்டாசுகள் இறக்குமதி செய்யப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. அவ்வாறு கடத்தி கொண்டு வரப்படும் பட்டாசுகள் அபாயகரமானவை. ‘பொட்டாசியம் குளோரைடு’ என்ற வேதிப்பொருள் அதில் இருப்பதால் தானாகவே வெடிக்கும் திறன் கொண்டவை. இதனால் விபத்துகள் ஏற்படும். வெளிநாடுகளில் இருந்து பட்டாசுகளை கடத்துவது சட்டவிரோதமானது. இதுகுறித்து போலீசில் புகார் செய்தால், கடும் தண்டனை விதிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

Post by:vkalathur kalam 

0 comments:

Post a Comment