Monday, September 26, 2016

Filled Under:

உள்ளாட்சித் தேர்தல்: வளர்மதி, கோகுல இந்திராவுக்கும் ஏமாற்றம்


valargokula

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு, 12 மாநகராட்சி வார்டுகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வளர்மதி, கோகுலா இந்திரா பெயர்கள் இடம்பெறவில்லை.
தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சி வார்டுகளுக்கான அதிமுக வேட்பாளர்களை, அக்கட்சியின் தலைமை இன்று அறிவித்தது.
சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் உட்பட 12 மாநகராட்சிகளுக்கான அனைத்து வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் பட்டியல் தடாலடியாக இன்று வெளியாகின.
இதில், தற்போது சென்னை மாநகராட்சி மேயராக இருக்கும் சைதை துரைசாமியின் பெயர் இடம்பெறவில்லை. இதன் மூலம் இவர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவில்லை கட்சித் தலைமை விரும்பவில்லை என்பது வெட்ட வெளிச்சமானது.
சைதை துரைசாமியின் மகன் வீட்டில் நடந்த வருமான வரித்துறையினரின் சோதனையை அடுத்து அவரது பெயர் பட்டியலில் இல்லாமல் போனது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தாமல் போயிருக்கலாம்.
ஆனால், பேரவைத் தேர்தலில் தோற்றதன் மூலம் சட்டப்பேரவைக்கு வர முடியாமல் போன வளர்மதிக்கும், கோகுல இந்திராவுக்கும் உள்ளாட்சித் தேர்தலில் நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த எதிர்பார்ப்பும் பொய்யாகிபோனதுதான் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Post by:vkalathur kalam 

0 comments:

Post a Comment