திருப்பதி: திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டியவர்களை பிடிப்பதற்காக காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிய 40க்கும் மேற்பட்டோரை பிடிக்க காவல்துறையினர் முயன்றதாகவும், அப்போது அவர்கள் காவல்துறையினரை நோக்கி கற்களை வீசியதால் காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், செம்மரங்களை வெட்டிய 40க்கும் மேற்பட்டோர் தப்பியோடியதாகவும், 4 தமிழர்கள் மட்டும் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கைதான 4 பேரிடமிருந்தும் 50 லட்சம் மதிப்புள்ள 33 செம்மரங்கள் பிடிபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post by:vkalathur kalam
0 comments:
Post a Comment