Monday, September 26, 2016

Filled Under:

சசிகலா புஷ்பாவை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

sasikala

புது தில்லி: மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டவருமான சசிகலா புஷ்பாவை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சசிகலா புஷ்பா வீட்டில் வேலை செய்த இரண்டு பெண்கள் கொடுத்த பாலியல் புகார் வழக்கில் முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து, சசிகலா புஷ்பா சார்பில் உச்ச நீதிமன்ற்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 6 வார காலத்துக்கு சசிகலா புஷ்பாவை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும், வழக்கு விசாரணைக்காக வரும் அக்டோபர் 3 மற்றும் 7ம் தேதிகளில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
Post by:vkalathur kalam

0 comments:

Post a Comment