Monday, September 19, 2016

Filled Under:

ஒவ்வொரு நாடும் சொந்த மண்ணில் செயல்படும் தீவிரவாத குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரான்ஸ்


உரி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரான்ஸ், பிற நாடுகளுக்கு எதிராக தங்கள் மண்ணில் செயல்படும் தீவிரவாதிகளுக்கு எதிராக ஒவ்வொரு நாடும் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
ஒவ்வொரு நாடும் சொந்த மண்ணில் செயல்படும் தீவிரவாத குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரான்ஸ்
புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை பிரான்ஸ் வன்மையாக கண்டிக்கிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்த இந்திய வீரர்களின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. தீவிரவாதத்திற்கு எதிராக போரிட எப்போதும் பிரான்ஸ் இந்தியாவிற்கு துணை நிற்கும். 

ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு மண்ணில் செயல்படும் தீவிரவாத இயக்கங்கள் அல்லது பிற நாடுகளுக்கு எதிராக தங்கள் மண்ணில் செயல்படும் தீவிரவாத குழுக்களுக்கு எதிராக திறம்பட எதிர்நடவடிக்கை எடுக்கவேண்டும். காஷ்மீர் விவகாரத்தில் அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும்.

0 comments:

Post a Comment