Monday, September 19, 2016

Filled Under:

சொர்க்கத்தில் கிடைக்கும் இன்பங்களிலேயே மிகச்சிறந்தது…


அல்லாஹ் (மறுமையில்) சொர்க்கவாசிகளை நோக்கி “சொர்க்கவாசிகளே!” என்று அழைப்பான். அவர்கள் ‘எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம். நன்மை அனைத்தும் உன் கரங்களிலேயே உள்ளது‘ என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ், “நீங்கள் திருப்தியடைந்தீர்களா?” என்று கேட்பான். மக்கள் ‘எங்கள் அதிபதியே! நாங்கள் திருப்தியடையாமலிருக்க எங்களுக்கு என்ன (குறையுள்ளது)? நீ உன் படைப்புகளில் எவருக்கும் வழங்கியிராதவற்றை எங்களுக்கு வழங்கியிருக்கிறாயே!‘ என்று பதிலளிப்பார்கள். அதற்கு அல்லாஹ், “இதைவிடவும் சிறந்ததை நான் உங்களுக்கு வழங்கட்டுமா?” என்று கேட்பான். சொர்க்கவாசிகள் ‘எங்கள் அதிபதியே! இதைவிடச் சிறந்தது எது?‘ என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ், “உங்களின் மீது என் திருப்தியைப் பொழிகிறேன். இனி என்றுமே உங்களின் மீது நான் கோபப்படமாட்டேன்” என்று சொல்வான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 7518

0 comments:

Post a Comment