ஜெர்மனியில் விரலளவு மட்டுமே கால்களை கொண்ட பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதுவே பிறக்கும் குழந்தைகளில் உலகிலேயே மிகச்சிறிய குழந்தை.
ஜெர்மனியில் விரலளவு மட்டுமே கால்களை கொண்ட பெண் குழந்தை உலகின் மிகச்சிறிய குழந்தை என்ற பெருமையை பெற்றுள்ளது. ஒன்பது மாதத்தில் பிறந்த இந்த குழந்தையின் எடை வெறும் 226 கிராம்தான் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு, லூகாஸ் – சபீன் என்ற தம்பதிக்கு எமிலியா என்ற குழந்தை பிறந்தது. இந்த குழந்தை 26 வாரத்தில் தாயின் கருவறையிலிருந்து சிசேரியன் முறையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு எடுக்கப்பட்டது. பிறக்கும் போதே எமிலியா 22 செ,மீ நிளமும், 299 கிராம் எடையுடன் பிறந்தார்.
இவருடைய கால்பகுதியானது மனிதனின் விரலளவுக்குதான் உள்ளது. இந்த குழந்தையின் கால்பகுதி வெறும் 3செ.மீ ஆகும்.
இதற்கு முன்னர் 243 கிராமில் பிறந்த குழந்தையே உலகின் மிக சிறிய குழந்தையாக இருந்த நிலையில் இந்த குழந்தை சிறிய குழந்தை என்ற உலக சாதனையை படைத்துள்ளது குறிப்பிடதக்கது.
0 comments:
Post a Comment