Friday, December 16, 2016

Filled Under:

பிளஸ் 2, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு


தமிழ்நாட்டில் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளை தமிழக தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.
பிளஸ் 2, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு
சென்னை:

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளை தமிழக தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிகளில் தற்போது அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. வார்தா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டதால் அங்குள்ள பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகளை தமிழக தேர்வுத்துறை இயக்ககம் இன்று அறிவித்துள்ளது.

அதன்படி பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 2-ம் தேதியும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 8-ம் தேதியும் தொடங்குகின்றது. பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான விரிவான அட்டவணையை கீழே பார்க்கலாம்.

+2 தேர்வு அட்டவணை விபரம்:

* தேர்வு எழுதும் கால நேரம்: காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15-க்கு முடிகிறது. 

02.03.17 - வியாழன் - தமிழ் முதல் தாள்

03.03.17 - வெள்ளி -  தமிழ் இரண்டாம் தாள்

06.03.17 - திங்கள் - ஆங்கிலம் முதல் தாள்

07.03.17 - செவ்வாய்  -  ஆங்கிலம் இரண்டாம் தாள்

10.03.17 - வெள்ளி - வணிகவியல் /  மனையியல் / புவியியல்

13.03.17 - திங்கள் - வேதியியல் / கனக்குப் பதிவியல்

17.03.17 - வெள்ளி - தகவல் தொடர்பு ஆங்கிலம் (கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்) / இந்திய கலாச்சாரம் / கணிப்பொறி அறிவியல் / உயிர் வேதியியல் / மேம்படுத்தப்பட்ட மொழிப்பாடம் (அட்வான்ஸ்ட் லாங்க்வேஜ் -தமிழ்)

21.03.17 - செவ்வாய் - இயற்பியல் / பொருளியல்

24.03.17 - வெள்ளி - தொழில் கல்வி தியரி / அரசியல் அறிவியல் /  செவிலியர் கல்வி (பொது) / புள்ளியியல்

27.03.17 - திங்கள் - கணிதம் / விலங்கியல் /  நுண்ணுயிரியியல் / ஊட்டச்சத்து மற்றும் உணவியல்

31.03.17 - வெள்ளி - உயிரியல் / வரலாறு / தாவரவியல் / வணிக கணிதம்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை:

* தேர்வு எழுதும் கால நேரம்: காலை 9:15 மணிக்கு தொடங்கி 12:00 மணிக்கு முடிகிறது.

08.03.17 - புதன் - தமிழ் முதல் தாள்

09.03.17 - வியாழன் - தமிழ் இரண்டாம் தாள்

14.03.17 - செவ்வாய் - ஆங்கிலம் முதல் தாள்

16.03.17 - வியாழன் - ஆங்கிலம் இரண்டாம் தாள்

20.03.17- திங்கள் - கணிதம்

23.03.17 - வியாழன் - அறிவியல்

28.03.17 - செவ்வாய் - சமூக அறிவியல்

30.03.17 - வியாழன் - மொழி (விருப்பத் தேர்வு).

0 comments:

Post a Comment