தமிழகத்தில் நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தின் போது கன்னட மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூர்:
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து நாளை தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு கொடுத்துள்ளன. பால் முகவர் சங்கம், விவசாயிகள் சங்கம், வணிகர் சங்கங்கள் மற்றும் லாரி உரிமையாளர் சங்கங்கள் மற்றும் பெட்ரோல் பங்குகள் உரிமையாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் நாளை நடைபெறும் போராட்டத்தின் போது கன்னட மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் தனது கடிதத்தில் ''தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞர் கர்நாடகாவில் தாக்கப்பட்ட சம்பவம் தமிழக ஊடகங்களில் பெரிதுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வாழும் கன்னடர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. பெங்களூர் போலீஸ் சந்தோஷைத் தாக்கிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. கர்நாடகாவில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இங்கு வாழும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கன்னடர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்கள் இங்கும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. எனவே தமிழ்நாட்டில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். தமிழகத்தில் வாழும் கன்னடர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்'' என தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment