ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாம்போர் பகுதியில் உள்ள தொழில்முனைவு மேம்பாட்டு நிறுவன (ஜேகேஇடிஐ) வளாகத்துக்குள் புகுந்த பயங்கரவாதிகளை அழிப்பதற்காக அந்த கட்டடத்தை நோக்கி வாகனங்களில் சென்ற ராணுவ வீரர்கள்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பாம்போரில் அரசு கட்டடத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய இரண்டு பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அங்கு மூன்று நாளாக நடைபெற்று வந்த துப்பாக்கிச் சண்டை முடிவுக்கு வந்துள்ளது.
ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் பாம்போர் பகுதியில் அமைந்துள்ள தொழில்முனைவு மேம்பாட்டு நிறுவன (ஜேகேஇடிஐ) வளாகத்துக்குள் இரண்டு பயங்கரவாதிகள் கடந்த திங்கள்கிழமை அதிகாலை நுழைந்தனர்.
தாங்கள் கட்டடத்துக்குள் இருப்பதை தெரிவிக்கும் வகையில், அங்குள்ள படுக்கைகளை பயங்கரவாதிகள் தீயிட்டு கொளுத்தினர்.
இதையடுத்து, அங்கு விரைந்த பாதுகாப்புப் படை வீரர்களை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். அவர் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், செவ்வாய்க்கிழமை ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தத் துப்பாக்கிச் சண்டை மூன்றாவது நாளாக புதன்கிழமையும் நீடித்தது. புதன்கிழமை பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மற்றொரு பயங்கரவாதியும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடலை ராணுவத்தினர் கைப்பற்றினர்.
இதையடுத்து, அந்தக் கட்டடம் முழுவதும் தற்போது ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், அங்கு பயங்கரவாதிகள் யாரேனும் பதுங்கியிருக்கிறார்களா என்பதையும் ராணுவத்தினர் சோதனை செய்து வருகின்றனர்.
லஷ்கர்-ஏ-தொய்பா இயக்கத்தினர்... முதல்கட்ட விசாரணையில், இந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் லஷ்கர்-ஏ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளதாக ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், அவர்கள் பாகிஸ்தானிலிருந்து ஜீலம் நதி வழியாக படகில் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவர் கூறினார். முழு விசாரணையும் முடிவடைந்த பின்னரே முழு விவரங்கள் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.
ஊடுருவல் முறியடிப்பு: இதனிடையே, ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை ராணுவத்தினர் முறியடித்தனர். குப்வாரா மாவட்டம், டங்தார் எல்லைக்குள் புதன்கிழமை அதிகாலை சில பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இதையறிந்த ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து, பயங்கரவாதிகள் பாகிஸ்தான் எல்லைக்குள் தப்பியோடியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 comments:
Post a Comment