ஜெயலலிதா பூரணகுணம் அடைய திருப்பதியில் சந்திரபாபு நாயுடு வழிபாடு நடத்தினார்.

சென்னை :
தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நல குறைவு கரணமாக கடந்த மாதம் 22-ந் தேதி முதல் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர் சிகிச்சை காரணமாக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை நாளுக்கு, நாள் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அறிவதற்காக அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கட்சி பேதமின்றி அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வந்து செல்கின்றனர்.
நேற்று முன்தினம் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக கேரள கவர்னர் பி.சதாசிவம், முதல்-மந்திரி பினராயி விஜயன், புதுச்சேரி துணை நிலை கவர்னர் கிரண் பேடி உள்பட பலர் வந்து சென்றனர்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று 20-வது நாளாக சிகிச்சை தொடர்ந்தது. அவருடைய உடல்நலம் குறித்து அறிவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, அகில இந்திய ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் ஏ.அபுபக்கர், ஜம்மு-காஷ்மீர் உணவுத்துறை மந்திரி சவுதாரி ஜூல்ப்கர் அலி, தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவரும், கயிறு வாரிய தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் டி.ஜி.பி. விஜயகுமார் உள்பட முக்கிய பிரமுகர்கள் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.
அவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த மூத்த நிர்வாகிகளிடம் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் வெளியே வந்த அவர்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.
அப்பல்லோ ஆஸ்பத்திரியின் வெளியே அ.தி.மு.க.வை சேர்ந்த மகளிரணியினர், தொண்டர்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைந்து வீடு திரும்பவேண்டும் என்று பிரார்த்தனை செய்துவருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் 2 பேர் ஆஸ்பத்திரி நுழைவு வாயிலில் அமர்ந்து மண் சோறு சாப்பிட்டனர். இதேபோல மகளிரணியினர் ஜெயலலிதா பூரண குணம் அடையவேண்டும் என்பதற்காக பூஜை நடத்தினர்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண குணம் அடையவேண்டும் என்பதற்காக ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு திருப்பதி கோவிலில் சிறப்பு பூஜை செய்துள்ளார்.
மேலும் கோவிலில் இருந்து லட்டு, பிரசாதம் மற்றும் சாமிக்கு அணிவிக்கப்பட்ட அங்க வஸ்திரம் ஆகியவற்றையும் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார். அதனை திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை உறுப்பினர் ஜே.சேகர் கொண்டு வந்தார்.
இதற்கிடையே அப்பல்லோ ஆஸ்பத்திரியின் தலைமை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். நிபுணர் குழுவில் உள்ள தீவிர சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் முதல்-அமைச்சர் உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள்.
தேவையான சுவாச உதவி, ஆண்டிபயாடிக்குகள், ஊட்டச்சத்து சிகிச்சை உதவிகள் மற்றும் பிசியோதெரபி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
எய்ம்ஸ் மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை பிரிவு பேராசிரியர் டாக்டர் கில்நானி கடந்த 9, 10-ந் தேதிகளில் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்து முதல்-அமைச்சரை மருத்துவ பரிசோதனை செய்து, அப்பல்லோ ஆஸ்பத்திரி மருத்துவ சிகிச்சை நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை செய்தார். முதல்-அமைச்சருக்கு தற்போது வழங்கப்படும் சிகிச்சை முறைகள் தொடர்பான கருத்துக்களையே டாக்டர் கில்நானியும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment