பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராக பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் இன்று பதவி ஏற்றார்.

புதுடெல்லி:
பா.ஜனதா சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நஜ்மா ஹெப்துல்லா மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டதால் காலியாக இருக்கும் அந்த இடத்துக்கு கடந்த 17-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
மத்தியப்பிரதேசத்தில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ள அந்த பதவிக்கு, தமிழக பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் அகில இந்திய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசனை கட்சி தலைமை தேர்வு செய்தது.
இதையடுத்து, இல.கணேசன் கடந்த மாதம் மத்திய பிரதேச மாநிலத்துக்கு சென்று மாநில சட்டமன்ற செயலாளரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, இல.கணேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராக அவர் இன்று பதவியேற்று கொண்டார். மாநிலங்களவை சபாநாயகரும், துணை ஜனாதிபதியுமான ஹமித் அன்சாரி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் தமிழகத்தில் பா.ஜனதா எம்.பி.க்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
‘மகாபாரதம்’ டி.வி. தொடரில் திரவுபதி கதாபாத்திரத்தில் நடித்த ரூபா கங்குலியும் இல.கணேசனுடன் இன்று பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராக பதவியேற்றார்.

0 comments:
Post a Comment