ராணுவ வீரர்களின் தைரியத்திற்கு அரசியல் தலைவர்கள் சான்றிதழ் தர தேவையில்லை என்று மத்திய பாதுகாப்பு துறை மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

கோவா:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் நுழைந்து இந்திய ராணுவம் கடந்த மாதம் 29-ம் தேதி சர்ஜிகல் தாக்குதலை நடத்தியது. இதில் பயங்கரவாதிகளில் 7 முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட உரி பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய அரசு கூறியது. இருப்பினும் பாகிஸ்தான் இது சர்ஜிகல் தாக்குதல் அல்ல என்று தெரிவித்து வருகிறது.
அதேபோல் முதலில் வரவேற்பு தெரிவித்தாலும், பின்னர் காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் தாக்குதல் நடைபெற்றதற்கான சான்றுகளை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்து வருகின்றன.
இந்நிலையில், ராணுவ வீரர்களின் தைரியத்திற்கு அரசியல் தலைவர்கள் சான்றிதழ் தர தேவையில்லை என்று மத்திய பாதுகாப்பு துறை மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோவாவில் செய்தியாளர்களிடம் பாரிக்கர் பேசியதாவது:-
அரசியல் முதிர்ச்சியை நாம் காட்டினோம் மற்றும் தைரியமான மோடி அரசாங்கம் காட்டியுள்ளது. வீரம் வாய்ந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு அரசியல் தலைவர்கள் சான்றிதழ் தர தேவையில்லை.
எத்தகைய துன்பத்தையும் சந்திக்கும் பலம் இந்திய ராணுவத்திற்கு உள்ளது. சர்ஜிகல் தாக்குதலை நிரூபிக்க தேவையில்லை. நான் நம்புகிறேன்.
ராணுவத்தின் பலம், நேர்மை குறித்து எந்த சந்தேகமும் இல்லை. கேட்கப்படுவது எல்லாம் அரசியல் காரணங்களுக்காகவே. ராணுவத்தின் பலம் சர்ஜிகல் தாக்குதலில் காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment