Saturday, September 24, 2016

Filled Under:

காஷ்மீரில் ஸ்மார்ட் சிட்டியை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்: காஷ்மீரி பண்டிட்டுகள் வேண்டுகோள்

காஷ்மீர்,

சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து வரும் காஷ்மீரி பண்டிட் சமூகத்திற்கான அமைப்பு ஒன்று காஷ்மீரில் ஸ்மார்ட் சிட்டி ஒன்றினை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என இன்று வலியுறுத்தி உள்ளது.  இது பற்றி அந்த அமைப்பின் தலைவர் ராம் கே. பட் கூறும்பொழுது, கூடுதலாக 27 ஸ்மார்ட் நகரங்களை பற்றிய மோடி அரசின் 3ம் கட்ட அறிவிப்பில் இடம் பெயர்ந்த சமூகத்திற்காக ஒரு ஸ்மார்ட் சிட்டியினை அறிவித்திடுவார் என நாங்கள் எதிர்நோக்கி இருந்தோம்.

ஆனால், துரதிர்ஷ்டவசம் ஆக, தீவிரவாதத்தின் மோசமிக்க பாதிப்பிற்குள்ளான மற்றும் சொந்த நாட்டிலேயே கடந்த 26 வருடங்களாக அகதிகள் போன்று வாழ்ந்து வரும் நாங்கள் மீண்டும் தவிர்க்கப்பட்டு உள்ளோம் என கூறியுள்ளார்.  இந்த வருடம் காஷ்மீரி சமூகத்தினை கருத்தில் கொள்ளாமல் மொத்தம் 100 ஸ்மார்ட் நகரங்களில் 60 ஸ்மார்ட் நகரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

அவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மந்திரி எம். வெங்கையா நாயுடு ஆகியோர் தங்களது உறுதிமொழியின்படி இடம் பெயர்ந்த சமூகத்தினருக்காக ஸ்மார்ட் சிட்டியினை எந்தவித காலதாமதமும் இன்றி அறிவிக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம் என்றும் கூறியுள்ளார்.

அரசானது புனரமைப்புக்கு வேண்டிய பொருட்களை அனுப்பியுள்ளது.  ஆனால், காஷ்மீரி பண்டிட்டுகளை மீண்டும் குடியமர்த்துவதற்கான விரிவான நீண்ட கால திட்டம் எதனையும் கொண்டு வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Post by;vkalathur kalam

0 comments:

Post a Comment