தினம் ஒரு ஹதீஸ் -295
நாம் (காலத்தால்) பிந்தியவர்களாவோம். மறுமையில் (அந்தஸ்தால்) முந்தியவர்களாவோம். எனினும், (யூத, கிறிஸ்தவரான) அவர்கள் நமக்கு முன்பே வேதம் அருளப்பெற்றார்கள். மேலும் இந்த நாள்தான் அவர்களுக்கும் (வாரவழிபாட்டு) நாளாக கடமையாக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் இ(ந்த நாளைத் தம் வாரவழிபாட்டு நாளாக ஏற்றுக் கொள்வ)தில் கருத்து வேறுபாடு கொண்டனர். ஆகவே, அல்லாஹ் நமக்கு அந்த நாளை அறிவித்தான். இதில் மக்கள் அனைவரும் நம்மைப் பின்தொடர்பவர்களே ஆவர். (எவ்வாறெனில், வெள்ளிக் கிழமை நமது வார வழிபாட்டு நாள் என்றால்) நாளை (சனிக்கிழமை) யூதர்களும் மறு நாள் (ஞாயிற்றுக் கிழமை) கிறிஸ்தவர்களும் (வார வழிபாடு நடத்தும் தினங்களாகும்)என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.
நூல்: புகாரி 876
Post by;vkalathur kalam
0 comments:
Post a Comment