சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு இல.கணேசனை வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக கட்சி மேலிடம்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
மத்தியப் பிரதேச பாஜக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நஜ்மா ஹெப்துல்லா மணிப்பூர் ஆளுநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டதை அடுத்து, அந்த பதவி காலியானது. இதைத் தொடர்ந்து, அந்த பதவிக்கு இல. கணேசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டதும், மத்திய அமைச்சரவையில் இல. கணேசன் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post by:vkalathur kalam
0 comments:
Post a Comment