Monday, September 26, 2016

Filled Under:

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க.சார்பில் 480 பேர் விருப்ப மனு


201609250242285812_in-local-elections-in-the-district-480-persons-custom_secvpfபெரம்பலூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் பெரம்பலூர் நகராட்சி கவுன்சிலர், மற்றும் வேப்பந்தட்டை, பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிகாடு ஆகிய பேரூர் கழக வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் தி.மு.க.வினரிடம் இருந்து கடந்த 21–ந்தேதி முதல் நேற்று வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. தி.மு.க. தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்ட மாநில சட்டத்துறை செயலாளர் அருண் தி.மு.க.வினரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றார். அந்தவகையில் இறுதி நாளான நேற்று மாலை வரை மொத்தம் 480 மனுக்கள் பெறப்பட்டன. முன்னதாக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தி.மு.க.செயற்குழுக்கூட்டம் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் நடராஜன் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன், சிவசங்கர் (அரியலூர்), நகர செயலாளர் பிரபாகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஓவியர் முகுந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment