புதுடெல்லி,இன்று இரவு 12 மணி முதல் ரூ. 500, 1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்று பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். புதியதாக புது வடிவத்துடன் ரூ. 2,000 மற்றும் 500 நோட்டுகள் வெளியிடப்பட உள்ளது.இருப்பினும், 72 மணி நேரத்துக்கு, அதாவது, 11-ந் தேதி நள்ளிரவு வரையில் சில இடங்களில் இந்நோட்டுகளை பயன்படுத்த விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.* மருத்துவமனைகள்* மருந்து கடைகள் * பெட்ரோல் விற்பனை நிலையங்கள் * ரெயில் நிலைய முன்பதிவு கவுண்ட்டர்கள் * பஸ் நிலையங்கள் * விமான நிலையங்கள் * உடல் எரியூட்டும் இடம்* கூட்டுறவு சங்கங்கள்* மாநில அரசு நடத்தும் பால் நிலையங்கள் ஆகிய இடங்களில் ரூ. 500, 1000 நோட்டுகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
Tuesday, November 8, 2016
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment