Saturday, October 8, 2016

Filled Under:

முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை தொடர்கிறது: அப்போலா அறிக்கையில் தகவல்

Chief Minister Jayalalithaa continues intensive treatment: report information on Apollo

சென்னை: சென்னை அப்போலா மருத்துமனையில் உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தினமும்  மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்று முதல்வர் உடலை சோதனை செய்த மருத்துவர்கள் குழு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளது. முதல்வருக்கு  அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள் இன்று அறிக்கை வெளியிட்டனர். அநடத அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு சுவாச சிகிச்சை குறித்து மருத்துவர்கள்  கவனமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் நுரையீரல் அடைப்பை போக்கும் சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், முதல்வருக்கு ஊட்டச்சத்தும், பிசியோதெரபி சிகிச்சையும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது என்றும் மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த 22ம் தேதி இரவில் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து  செல்லப்பட்டு சேர்க்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர் சத்துகுறைபாடு இருப்பதாகவும், அதற்கான சிகிச்சை அளிப்பதாகவும் அப்போலோ மருத்துவமனை  சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அப்போலோ மருத்துவமனை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவருக்கு பல்வேறு தொடர் பரிசோதனைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளதால், அவர்  மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

0 comments:

Post a Comment