Wednesday, October 19, 2016

Filled Under:

உத்தரகாண்ட்:விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்து


டேராடூன்,உத்தரகாண்டில் இந்திய விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இந்திய விமான படைக்கு சொந்தமான எம்.ஐ–17 வி5 ரக என்ற ஹெலிகாப்டர்  உத்தரகாண்ட் மாநிலத்தின் கேதார்நாத், மனா பள்ளத்தாக்குகளுக்கு இடையிலான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அதில் ராணுவ அதிகாரிகள் 12 பேர் மற்றும் விமான படை அதிகாரிகள் மொத்தம் என 15 பேர் இருந்தனர்.அப்போது சமோலி மாவட்டத்தில் உள்ள கஸ்தோலி ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டரில் திடீரென எந்திர கோளாறு ஏற்பட்டது.  உடனடியாக ஹெலிகாப்டரை தறையிறக்க விமானி முயற்சித்தார். அதற்குள் ஹெலிகாப்டர் அந்த இடத்திலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஹெலிகாப்டர் பயங்கரம் சேதம் அடைந்தது.அதில் இருந்து ராணுவ வீரகள் மற்றும் விமான படை அதிகாரிகள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.இந்த விபத்து குறித்து விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:

Post a Comment