பெய்ஜிங்,விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை நிறுவிட திட்டமிட்டுள்ள சீனா கடந்த 2013-ம் ஆண்டு ‘டியாங்காங் 1’ என்ற ஆய்வு விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தில் சென்ற மூன்று சீன விஞ்ஞானிகள் 15 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை நடத்தி முடித்து, வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர். ஜிகுவான் மாகாணத்தில் உள்ள கோபி பாலைவனம் பகுதியில் இருந்து ‘டியாங்காங் 2’ என்ற விண்கலத்தை கடந்த மாதம் 15-ம் தேதி சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.இந்நிலையில், சீனா, இரண்டு விஞ்ஞானிகளுடன் ’ஷெங்ஸோ 11’ என்ற விண்கலத்தை இன்று காலை 5 மணியளவில் விண்ணில் செலுத்தியுள்ளது. சீனாவின் விண்வெளி வீரர்களான ஜிங் ஹாய்பிங் மற்றும் சென் டாங் ஆகியோர் இந்த விண்கலத்தில் பயணிக்கின்றனர்.’ஷெங்ஸோ 11’ விண்கலத்தில் விண்வெளிக்கு செல்லும் இரண்டு விஞ்ஞானிகளும் சுமார் ஒருமாத காலம் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.இந்த ஆய்வுகளை அடுத்து, வரும் 2022-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிரந்தரமான ஆய்வு நிலையத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.விஞ்ஞானிகளுடன் இவ்வளவு நீண்ட தூரம் செல்லும் முதல் விண்கலம் இதுதான் என்பது கவனிக்கத்தக்கது.
Sunday, October 16, 2016
Filled Under: உலகச் செய்திகள்
விஞ்ஞானிகளுடன் நீண்ட தூரம் செல்லக்கூடிய விண்கலத்தை விண்ணில் செலுத்தியது சீனா
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment