பாட்னா,பீகார் மாநிலத்தில் 2015 அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடந்த சட்டசபை தேர்தலின்போது, முழுமையான மதுவிலக்கை கொண்டுவருவோம் என வாக்குறுதி அளித்து நிதிஷ் குமார் தலைமையிலான மதசார்பற்ற மகா கூட்டணி ஆட்சியை பிடித்தது.தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நிதிஷ் குமார் அரசு, கடந்த ஏப்ரல் மாதம் மதுவிலக்கு சட்டம் கொண்டு வந்தது. இதன்படி உள்நாட்டு மதுபானங்கள் தயாரிப்பு, விற்பனை, மதுபானங்கள் குடித்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது.இந்த நிலையில், மதுவிலக்கு சட்டத்துக்கு எதிராக மதுபான விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் சில தனிநபர்கள் பீகார் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மதுவிலக்கு சட்ட அரசாணை சட்டவிரோதமானது என கூறி ரத்து செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பீகார் அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பாட்னா ஐகோர்ட்டு தீர்ப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதன் மூலம் பீகாரில் மீண்டும் மதுவிலக்கு அமலாகியுள்ளது.
Friday, October 7, 2016
Filled Under: உலகச் செய்திகள்
மதுவிலக்கை ரத்து செய்து பாட்னா ஐகோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment