Monday, October 17, 2016

Filled Under:

என்.எஸ்.ஜி.-யில் இந்தியா இணைய பிரேசில் ஆதரவு: மோடி பாராட்டு


என்.எஸ்.ஜி.-யில் இந்தியா இணைவதற்கு பிரேசில் ஆதரவு அளித்ததுடன், இதற்கான உதவிகளை செய்யும் என அந்நாட்டின் அதிபர் உறுதி அளித்துள்ளார்.
என்.எஸ்.ஜி.-யில் இந்தியா இணைய பிரேசில் ஆதரவு: மோடி பாராட்டு
பெனாலிம்:

என்.எஸ்.ஜி. எனப்படும் அணுசக்தி விநியோகக் குழுவில் உறுப்பினர் ஆவதற்கு இந்தியா விண்ணப்பித்துள்ளது. ஆனால், சீனா உள்ளிட்ட சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. குறிப்பாக, 48 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பில் புதிய உறுப்பினரை சேர்ப்பது தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் பற்றி சீனா சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவ்வாறு, புதிய உறுப்பினரை சேர்ப்பது தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்படாததால் இந்தியாவின் முயற்சி இன்னும் நிறைவேறவில்லை. 

இந்நிலையில், கோவாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரேசில் அதிபர் மிக்கேல் டேமர், என்.எஸ்.ஜி.யில் இந்தியா இணைவதற்கு ஆதரவு அளிக்கும் என உறுதி அளித்துள்ளார்.

மோடியை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, பிரேசிலின் ஆதரவு மற்றும் விருப்பத்தை அதிபர் டேமர் தெரிவித்துள்ளார். 

இதுபற்றி வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பிரீத்தி சரண் நிருபர்களிடம் கூறுகையில், “அணுசக்தி விநியோகக் குழுவில் சேர வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பத்தை அதிபர் டேமரிடம் மோடி தெரிவித்தார். டேமர் நமது விருப்பத்தை புரிந்து கொண்டு ஆதரவு அளிப்பதாக தெரிவித்ததுடன், இந்தியாவுக்கு உதவும்படி என்.எஸ்.ஜி.யில் உள்ள பிற நாடுகளிடம் பேசுவதாகவும் தெரிவித்தார்” என்றார்.

இதற்காக பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் மைக்கேல் டேமரை பாராட்டியுள்ளார். 

“தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதில் இந்தியாவின் முக்கிய கூட்டாளியாக பிரேசில் திகழும். இருநாடுகள் மற்றும் பலநாடுகளின் உறவுகள் அடிப்படையில் இந்தியாவும், பிரேசிலும் ஏராளமான வாய்ப்புகளை கொண்டுள்ளன. இவற்றை நாங்கள் அறுவடை செய்வோம். இந்தியாவில் முதலீடு செய்வதற்கு பிரேசில் மிகவும் நெருங்கி வந்து இருப்பதற்காக அந்நாட்டை பாராட்டுகிறேன்” என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment