Advertisment
பெரம்பலூர் நகராட்சியில் கடைகள் முறையான டெண்டர் இல்லாமலும், நகராட்சி கவுன்சிலர்களின் சம்பாதிப்பதற்காகவே கடைகள் கட்டப்பட்டு லட்சகணக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டே கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நகர் புற திட்டமிடலுக்கு ஏற்ப முறையாக கட்டிடம் கட்டப்படாமலும், கழிவறை வசதி இல்லாமலும், கடைகள் கட்டப்பட்டுள்ளது. இதனால், கடைகளை நடத்துபவர்கள், பணிபுரிபவர்கள், கடும் சிரமப்படும் வகையிலும், வாகனங்கள் நிறுத்தவும், பாதசாரிகள் சென்று வரவும் போதுமான பாதை வசதி இல்லாமல் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
மேலும், உண்மையாக தொழில் செய்பவர்களுக்கு கடை வழங்காமல் சட்டத்திற்கு புறம்பாக கருப்பு பணம் வழங்கியவர்களுக்கு மட்டுமே கடைகள் வழங்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கடைகள் உள்வாடகைக்கே விடப்பட்டுள்ளது.
இது குறித்து மற்ற எதிர்கட்சினர், கூட்டணி கட்சியினரும் கேள்வி கேட்க மாட்டார்கள். ஏனென்னறால், அவர்களுக்கு உரிய பங்கும் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு கடைகளை எடுத்து இருக்கும் உரிமையாளர்கள் பெயர்களை பார்த்தாலே தெரியும்.
மேலும், பெரம்பலூர் கட்டட உரிமையாளர்கள், சென்னையை விட அதிகமாக கட்டணம் வசூலிப்பதால் பெரும்பாலான தொழில் முனைவோர்கள் பெரம்பலூரை விட்டு விட்டு, புதுச்சேரி சென்னை, திருச்சி போன்ற நகரங்களுக்கு சென்று வருகின்றர். முறையான சரக்கு போக்கு வரத்து வசதியும் பெரம்பலூரில் கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நகராட்சி நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணங்களே உள்வாடகைகளாக வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக தட்டி கேட்க வேண்டிய பத்திரிக்கை துறையினரும் கடைகளை எடுத்து இருப்பதால், இந்த விவகாரத்தில் நியமான விவகாரங்கள் வெளிவராமல் போயின.
திருநெல்வேலி பிரம்மா போன்று பெரம்பலூர் வழக்கறிஞர்களோ, வழக்கறிஞர் சங்கங்களோ, இந்த சமூகத்தின் மீது அக்கறை கொண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்திலோ, அல்லது நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்க எந்த கட்சியின் வழக்கறிஞர் அணியும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாள் ஒன்றுக்கு ரூ.500 முதல் ஆயிரம் வரை உள்வாடகைக்கு விடப்பட்டுள்ளது. கடைகள் ஒன்றுக்கு நகராட்சிக்கு 3 முதல் 10 லட்சம் வரை லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது சட்டத்திற்கு புறம்பாக சம்பாதிக்கப்பட்ட கருப்பு பணம். வரி ஏய்ப்பும் செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கடைகளை ஏலம் பொது மக்கள் முன்னிலையிலோ அல்லது e-tender மூலமோ மீண்டும் ஏலம் விடவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
நன்றி : காலைமலர்
0 comments:
Post a Comment