Thursday, September 29, 2016

Filled Under:

இந்தியாவுக்கு எதிராக பாக்.,-கில் வளரும் தீவிரவாதம் : துப்பாக்கியை காட்டி பிரதமர் மோடிக்கு சிறுமி மிரட்டல்

Growing extremism in Pakistan against India : Girl threat to Modi by shown gun
இஸ்லாமாபாத்: ஏ.கே 47 ரக துப்பாக்கியால் சுட்டு பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் சிறுமி மிரட்டல் விடுக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் தனது மகளுக்கு ஏ.கே 47 ரக துப்பாக்கியை எவ்வாறு சுடுவது என கற்று கொடுத்து, பிரதமர் மோடியை எச்சரிக்குமாறு சொல்லிக் கொடுக்கும் காட்சியை வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் என்ன பேசுகிறோம் என்று அறியாமல் சிறுமி கேமராவை நோக்கி பிரதமர் மோடிக்கு மழலை மொழியில் மிரட்டல் விடுத்துள்ளார். மகளுக்கு தந்தையே துப்பாக்கி பயிற்சி கொடுக்கும் காட்சி உலகம் முழுவதிலும் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மகளுக்கு- தந்தையே துப்பாக்கி சுட கற்று கொடுக்கும் செயல் காட்டுமிராண்டித்னமானது என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெிரிவித்துள்ளனர். சிறுமியின் கையில் பேனாவை கொடுங்கள், துப்பாக்கியை அல்ல என்றும் சிலர் காட்டமாக தெரிவித்துள்ளனர்.
Post by:vkalathur kalam 

0 comments:

Post a Comment