பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் நோக்கில் ஒவ்வொரு மாதமும் தனியார்த்துறை நிறுவனங்களை கொண்டு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள வேலை வாய்ப்பு முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள உள்ளனர். இத்தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாமில் வேலை இல்லாதவர்கள் கலந்துகொண்டு தனியார்த்துறை வேலைவாய்ப்பு பெற்று பயன்பெற வேண்டும். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர் அனைத்து கல்விச்சான்றிதழ்கள், 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவற்றை தவறாமல் எடுத்துவர வேண்டும். இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை 04328–225352 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Post by:vkalathur kalam
0 comments:
Post a Comment