உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை எளிமைப்படுத்தி அமல்படுத்த வேண்டும் என்று வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

நெல்லை:
நெல்லை டவுன் வியாபாரிகள் நல சங்க பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை எளிமைப்படுத்தி அமல்படுத்த வேண்டும். பல மாவட்டங்களில் அதிகாரிகள் இச்சட்டத்தை காரணம் காட்டி வியாபாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து சென்னையில் கூடி ஆலோசனை நடத்தி உள்ளோம்.
தேர்தல் நேரத்தில் வியாபாரிகள் பணம் கொண்டு செல்ல கடும் நிபந்தனைகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. இதனை எளிமைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது டவுன் வியாபாரிகள் நலசங்க தலைவர் முருகேசன் உடனிருந்தார். தொடர்ந்து வியாபாரிகள் நல சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
0 comments:
Post a Comment