சென்னை: நிலக்கரி இறக்குமதியில் முறைகேடுகள் செய்த குற்றச்சாட்டு மற்றும் முறைகேடான பணத்தை ஹாங்காங்கீி
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் தலைமை செயலாளர் ஞானதேசிகன் ஆகியோரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
முந்தைய அதிமுக ஆட்சியில் மின்சார துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன், நிலக்கரி இறக்குமதியில் முறைகேடுகள் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வருமான வரித்துறையினரும் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. விஸ்வநாதன் மற்றும் அவரது மகன் அமர்நாத்திடம் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்றும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத்தில் பணம் பரிமாற்றம் குறித்தும் மின்வாரிய உயர் அதிகாரிகளிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர். முன்னாள் தலைமை செயலாளர் ஞான தேசிகனும் விசாரணை வலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன