Tuesday, September 20, 2016

Filled Under:

பள்ளி பேருந்து கால்வாய்க்குள் விழுந்து மூழ்கியது: 6 மாணவர்கள் உடல்கள் மீட்பு


பஞ்சாப் மாநிலத்தில் பள்ளி பேருந்து கால்வாய்க்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் தண்ணீரில் மூழ்கினர். 6 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
பள்ளி பேருந்து கால்வாய்க்குள் விழுந்து மூழ்கியது: 6 மாணவர்கள் உடல்கள் மீட்பு
அமிர்தசரஸ்:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே சுமார் 50 பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சொந்தமான பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து முஹாவா என்ற கிராமம் அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையோரம் இருந்த கால்வாயில் பாய்ந்தது. அட்டாரி எல்லை அருகே இந்த விபத்து நடந்துள்ளது. 

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 6 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 31 குழந்தைகளை மீட்கும் பணியில் மீட்பு குழு ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விபத்தில் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்தில் சிக்கிய குழந்தைகள் அனைவரும் எல்.கே.ஜி, யூ.கே.ஜி படித்து வந்த குழந்தைகள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

0 comments:

Post a Comment