சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை 20-ந்தேதி திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

சென்னை:
முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்குவது காவேரி டெல்டா பகுதி. இந்தப் பகுதியில் நெல் சாகுபடிக்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது காவேரி நதிநீர். கர்நாடக மாநிலத்துடன் பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் காவேரி பிரச்சனையைத் தீர்ப்பதற்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் காவேரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, அந்த காவேரி நடுவர் மன்றம் தனது இறுதி ஆணையை 5.2.2007 அன்று வழங்கியது. உச்சநீதிமன்றத்தில் எனது தலைமையிலான அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் காரணமாக காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை மத்திய அரசிதழில் 19.2.2013 அன்று வெளியிடப்பட்டது. எனினும், காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை மத்திய அரசு இன்னமும் அமைக்காத காரணத்தால், காவேரி நீரில் நமக்குரிய பங்கை பெற நாம் உச்சநீதிமன்றத்தை நாடும் நிலையே உள்ளது. இந்த அமைப்புகள் அமைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் எனது தலைமையிலான அரசால், 2013ஆம் ஆண்டே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை இன்னமும் நிலுவையில் உள்ளன.
நடப்பு பாசன ஆண்டில், காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படி கர்நாடக அரசு நீரை விடுவிக்காததால், நமக்குரிய நீரை விடுவிக்கும்படி கர்நாடக அரசுக்கும், நீரை விடுவிக்க அறிவுரை வழங்கும்படி மத்திய அரசுக்கும் தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்ட கடிதங்களின் அடிப்படையில், கர்நாடக அரசு நீரை விடுவிக்காததால், எனது உத்தரவின் பேரில், உச்சநீதிமன்றத்தில் 22.8.2016 அன்று இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ள அளவுகளின்படி கர்நாடகம் நீரை விடுவிக்கவில்லை என்பதை தெரிவித்து, தமிழகத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரப்பட்டது.
நமக்குத் தேவையான அளவு தண்ணீர் மேட்டூர் அணையில் கிடைக்கப் பெறாத சூழ்நிலையில், டெல்டா விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா சாகுபடி மேற்கொள்வதற்கு ஏதுவாக 64 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ஒரு சிறப்பு தொகுப்பு திட்டத்தை சட்டப்பேரவையில் 18.8.2016 அன்று நான் அறிவித்தேன். இந்த அறிவிப்பின்படி செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தின் காரணமாக சம்பா சாகுபடியை முழுவீச்சில் மேற்கொள்ளும் நிலையில் டெல்டா விவசாயிகள் தற்போது உள்ளனர்.
தமிழகத்திற்கு உரிய நீரை வழங்கிட வேண்டும் என தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை விசாரித்த உச்சநீதிமன்றம், பில்லிகுண்டுலு நீரளவு நிலையத்தில் நாளொன்றுக்கு 15,000 கன அடி வீதம் கிடைக்கும் வகையில், 5.9.2016 முதல் 10 நாட்களுக்கு அதன் அணைகளிலிருந்து நீரை விடுவிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஆணை வழங்கியது. அதன் பின்னர், கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவினை விசாரித்த உச்ச நீதிமன்றம், 12.9.2016 முதல் 20.9.2016 வரை நாளொன்றுக்கு 12,000 கனஅடி நீரை விடுவிக்க வேண்டும் எனவும், இந்த ஆணை 20.9.2016 வரையில் நடைமுறையில் இருக்கும் எனவும் உத்தரவிட்டது. இதனடிப்படையில், பில்லிகுண்டுலு நீரளவு நிலையத்தில் 14.9.2016 வரையில் 8.92 டிஎம்சி அடி நீர் கிடைக்கப் பெற்றுள்ளது. மேலும், உச்சநீதிமன்றம், காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படி, தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவை கணக்கிட்டு உத்தரவு வழங்கும்படி காவேரி மேற்பார்வை குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.
மேட்டூர் அணையில், 16.9.2016 அன்றைய நிலவரப்படி 84.76 அடி நீர் உள்ளது. கர்நாடக நீர்த்தேக்கங்களிலிருந்து உச்சநீதிமன்ற ஆணைகளின்படி, நீர் கிடைப்பதை எதிர்நோக்கியும், காவேரி மேற்பார்வை குழு நமக்குரிய நீரை கர்நாடகம் வழங்கிட உத்தரவு வழங்கும் என்பதன் அடிப்படையிலும், இந்த வருடம் வடகிழக்கு பருவமழை இயல்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும், விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக 20.9.2016 முதல் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.

0 comments:
Post a Comment