Advertisment
பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனையில் ஜப்பான் தொழில்நுட்பத்துடன், அதிநவீன கருவிகளுடனான செயற்கை கருத்தரிப்பு மையம் ஞாயிற்றுக்கிழமை (அக்.2) தொடங்குகிறது என்றார் லட்சுமி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் கருணாகரன்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை மேலும் கூறியது:
இங்கு, ஐ.யூ.ஐ., ஐ.வி.எப்., ஐ.சி.எஸ்.ஐ., முறைகள் மூலம் செயற்கை கருத்தரிப்பு செய்யப்படும். மேலும், பீசா, டீசா, பீட் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படும்.
இங்கு, ஐ.யூ.ஐ., ஐ.வி.எப்., ஐ.சி.எஸ்.ஐ., முறைகள் மூலம் செயற்கை கருத்தரிப்பு செய்யப்படும். மேலும், பீசா, டீசா, பீட் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படும்.
ஸ்பேர்ம் பேங்க், எம்பிரியோ ப்ரீஷிங் வசதிகள் கொண்ட அதிநவீன லேப் வசதி, 3டி மற்றும் 4டி ஸ்கேன் வசதி, அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கு, அதிநவீன இன்குபேட்டர்கள் மற்றும் இக்ஷி மெஷின்கள் உள்ளிட்ட அனைத்து வசதியுடன் கூடிய அதிநவீன செயற்கை கருத்தரிப்பு மையமாக பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் முறையாக தொடங்கப்படுகிறது. இந்த மையத்தை, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா திறந்து வைக்கிறார் என்றார் அவர். பேட்டியின்போது, மருத்துவமனை இயக்குநர் ஜெயலட்சுமி உடனிருந்தார்.
Post by:vkalathur kalam
0 comments:
Post a Comment